search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் காயம்"

    கள்ளப்பெரம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள சக்கரசாமந்தத்தை சேர்ந்த முருகையன் என்பவரின் மகன் செங்குட்டுவன் (வயது 30). விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் சக்கரசாமந்தத்தில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் ரெட்டிப்பாளையம் அருகே உள்ள சப்தகிரி நகர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் செங்குட்டுவன் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த செங்குட்டுவனின் கால் முறிந்து காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காரிமங்கலம் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். #jallikattu
    காரிமங்கலம்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ராமாபுரம் பகுதியில் எருதுவிடும் விழா நடைபெற்றது.  இதில் 12 கிராமங்களை சேர்ந்த எருதுகள் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டது. இதை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். மாடுகள் இழுத்து வரும் நிலையில் வேடிக்கை பார்த்து வந்தவர்கள் அங்குமிங்கும் ஓடினர். 

    இதில் மாடு ஒன்று முட்டியதில், வேடிக்கை பார்த்து கொண்டிருந்த காரிமங்கலம் அடுத்த கீழ்கொள்ளுப்பட்டியை சேர்ந்த  கட்டிட மேஸ்திரி ரவி (37) என்பவர் படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காரிமங்கலம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சேர்த்தனர். தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #jallikattu
    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய வாலிபருக்கு கால் துண்டாது. ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சேலம்:

    சேலம் கருங்கல்படி தெற்கு முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 40). இவர் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்றிரவு ஊருக்கு புறப்பட்டார்.

    இந்த ரெயில் இன்று காலை 5.30 மணியளவில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தது. ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்த போது தேவேந்திரன் ரெயிலில் இருந்து இறங்கினார்.

    அப்போது நிலை தடுமாறிய அவர் ரெயிலுக்கும் பிளாட்பாரமுக்கும் இடையில் விழுந்தார். இதில் அவரது கால் துண்டானது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை மீட்ட ரெயில்வே போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை அருகே இன்று அதிகாலை வாகனம் மோதியதில் 40 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. மேலும் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
    அவனியாபுரம்:

    மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் மாரணி பகுதியைச் சேர்ந்தவர் கூத்தபெருமாள் (வயது 40). இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார்.

    இன்று அதிகாலை அவனியாபுரம் அருகே உள்ள வலையங்குளத்தில் ஆட்டுக்கிடை அமைப்பதற்காக தனது ஆடுகளை ஓட்டிச்சென்றார். பெருங்குடி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக ஆடுகளின் மீது மோதியது.

    இதில் 40 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தன. இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

    மேலும் மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற கூத்த பெருமாள் மீதும் அந்த வாகனம் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
    வீராம்பட்டினம் கோவில் விழாவில் வண்டியை பார்க்கிங் செய்ததில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் ஒதியம்பட்டு அன்புநகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது30). இவர் நேற்று முன்தினம் வீராம்பட்டினம் கோவில் திருவிழாவுக்கு சென்றார். அங்குள்ள சுனாமி நகரில் பிரபாகரன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். அப்போது 2 பேர் வந்த மோட்டார் சைக்கிள் மீது பிரபாகரன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் உரசியது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரும் பிரபாகரனிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். மேலும் பீர்பாட்டிலால் குத்தினார். இதில் காயம் அடைந்த பிரபாகரன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரபாகரனை தாக்கியவர்கள் வீராம்பட்டினத்தை சேர்ந்த பிரேம் மற்றும் மதுரையை சேர்ந்த ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    மர்ம நபர்கள் கொல்வதுபோல கனவு கண்டு அய்யோ என்று கூறி கொண்டே அரசு ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #youthinjured

    சேலம்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னச்சேலம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் மன்சூர்(வயது 23). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது கம்புகள் நட்டு அதில் ஏறி நின்று கட்டுமான பணி செய்து கொண்டிருந்தபோது, கம்புகள் சரிந்து கீழே விழுந்தார். இதில் மன்சூருக்கு இடது கை முறிந்தது.

    இதையடுத்து கடந்த 19-ந்தேதி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மன்சூர் சேர்ந்தார். இங்கு அவர் 2-வது தளத்தில் உள்ள உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    வழக்கம்போல் நேற்று இரவு டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1.30 மணிக்கு மர்ம நபர்கள் தன்னை அடிப்பது போல், வெட்டுவது போல் கனவு கண்டு அய்யோ, அம்மா என மன்சூர் அலறினார்.

    சத்தத்தை கேட்டு பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் கண் விழித்து பார்த்தனர். ஆனால் மன்சூர் தூக்கத்தில் கனவு கண்டபடி தொடர்ந்து யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஓரு கட்டத்தில் என்னை கொல்லுறாங்க.. கொல்லுறாங்க என கூறிக் கொண்டு 2-வது தளத்தில் இருந்து கீழே குதித்தார்.

    இதில் அவர் அதிர்ஷ்டவசமாக முதல் தளத்தில் உள்ள சிலாப்பில் விழுந்து தங்கியதால் உயிர் தப்பினார். இதில் அவருக்கு இடுப்பு எழும்பு, முதுகு தண்டு, தண்டுவடம் உள்ளிட்ட இடங்களில் பலத்த அடிப்பட்டது. இதை பார்த்து மற்ற நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் டாக்டர்கள் வந்து படுகாயம் அடைந்த மன்சூரை மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    ×